Agangaram Aapathu

Share:

Listens: 12.4k

Oru Kathai Sollunga

Kids & Family


பொதுவாக, குழந்தைகளுக்கு கதை கேட்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. இது கூட்டுக் குடும்பமாக இருந்த காலகட்டத்தில் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் கதைகளின் மூலமாக குழந்தைகளுக்கு நிறைய நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டுள்ளனர். அதன் மூலம் அவர்களின் கற்பனைத் திறனும் அதிகரிக்கும். எவ்வாறென்றால், ஏதாவது ஒரு காட்சியை நாம் விவரிக்கும் போது மட்டுமே அவர்கள் அந்தக் காட்சியில் உள்ள கதாபாத்திரங்கள் எப்படி இருப்பார்கள்,அவர்களின் உருவ அமைப்பு பற்றியவற்றை கற்பனை செய்து அவர்களின் அறிவாற்றலை பெருக்கிக் கொள்வர். இந்த காலத்து குழந்தைகள் அதிகமாக எலக்ட்ரானிக் கேஜட்ஸ் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் கண் பார்வை பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் போன்றவை இருப்பதால் அவர்கள் இவற்றை தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது போக, அவர்கள் தங்களது பொழுதுபோக்கு நேரத்தில் அதிகமான நேரங்களை டிவி பார்ப்பதிலும், யூடியூப் சேனல்களில் வரும் கதைகளை பார்ப்பதிலும் செலவழிக்கின்றனர். அந்த காலத்தில் வகுப்புகளில் குறைந்த சதவீத குழந்தைகள் மட்டுமே கண்ணாடி அணிந்து வந்தனர். ஆனால், இப்போதோ குறைந்த சதவீத குழந்தைகள் மட்டுமே கண்ணாடி அணியாமல் வருகின்றனர். இந்த சேனலின் நோக்கம் என்னவென்றால் குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்கும் வகையில் ஆடியோ மூலமாக பல நல்லொழுக்க கதைகளை சுவையான முறையில் தருவதற்கு முயற்சிக்கிறோம். support our channel : Oru Kathai Sollunga Audio bedtime story for kids in Tamil